BeJay Agro Products

தினை அரிசி பணியாரம் (Millet Rice Paniyaram)

தினை அரிசி பணியாரம் தேவையான பொருட்கள்: தினை – 1/2 கப் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 4 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1 சிட்டிகை தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1. முதலில் வெல்லத்தை 1/4 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து பாகு போன்று செய்து கொள்ள வேண்டும்.அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 2. பீஜே தினையை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து, ஊறிய தினையை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 3. குறிப்பாக மாவானது ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்.பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 4. அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். 5.கல்லானது சூடானதும், குழிகளில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். 6. பின் ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தித்திக்கும் தினை பணியாரம் ரெடி!!! save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தினை அரிசி உப்மா (Millet Rice Upma)

தினை அரிசி உப்மா தேவையான பொருட்கள்: தினை / ஃபாக்ஸ்டெயில் தினை – ½ கப் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – ½ தேக்கரண்டி உளுந்து பருப்பு – ½ தேக்கரண்டி சீரகம் / ஜீரகம் – ¼ தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 துளிர் வெங்காயம் – 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது கேரட் – 1 பொடியாக நறுக்கியது பட்டாணி தேவைக்கேற்ப தேங்காய் – ¼ கப் துருவியது செய்முறை: 1. கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சீரகத்தைப் போட்டு, அத்துடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். 2. வெங்காயம், மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 3. கேரட்,பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடங்கள் சமைக்கவும். 4. பீஜே தினை ஊற்றி நன்கு கிளறவும். தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அது வேகும் வரை 15 நிமிடம் மூடி வைக்கவும். 5. தேங்காய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு சூடாக பரிமாறவும். save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தினை அரிசி பொங்கல் (Millet Rice Pongal)

தினை அரிசி பொங்கல் தேவையான பொருட்கள்: தினை அரிசி-3/4கப் பாசிப்பருப்பு-1/4கப் பச்சை மிளகாய்-2 இஞ்சிதுண்டு- 1 சீரகம்-1டீஸ்பூன் மிளகு-1/2டீஸ்பூன் முந்திரிப் பருப்பு-2டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை நெய்-1/4கப் தண்ணீர்-5கப் உப்பு தேவையான அளவு செய்முறை: 1. பாசிப்பருப்பை வெரும் வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். 2. பீஜே தினை அரிசிபாசிப்பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 3. பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் திணை அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து மூடிவைக்கவும். 4. நன்கு கொதிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும். அவ்வப்போது கலந்து விடவும்.கொஞ்சம் நெய் சேர்க்கவும். 5. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, மிளகு,சீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 6. நெய்யில் வதக்கிய பொருட்களை வேகும் பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். 7. பின்னர் முந்திரியை அதே நெய்யில் வறுத்து சேர்க்கவும். எல்லாம் சேர்த்தவுடன் பொங்கலை நன்கு கலந்து விட்டு இறக்கினால் மிகவும் சுவையான,சத்தான, ஆரோக்கியமான தினை பொங்கல் தயார். save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தினை அரிசி இட்லி/ தோசை (Millet Rice Idly/Dosa)

தினை அரிசி இட்லி/ தோசை தேவையான பொருட்கள்: தினை அரிசி [Foxtail millet] – 2 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் வெந்தய விதைகள் – 1 டீஸ்பூன் கடல் உப்பு அல்லது ருசிக்க உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் செய்முறை: 1. வெந்தயத்துடன் பீஜே தினை அரிசிஉளுத்தம் பருப்பு தனித்தனியாக 6 முதல் 7 மணி நேரம் ஊறவைக்கவும். 2. தண்ணீரை வடிகட்டி நன்றாக அரைக்கவும். உளுத்தம்பருப்பு, திணை அரிசி, வெந்தய விதை கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும், நன்கு கலக்கவும், கடல் உப்பு சேர்த்து, மாவை நொதிக்க வைக்கவும் [தோராயமாக. 8 மணிநேரம், நொதித்தல் நேரம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மற்றும் வானிலை நிலைமைகளுக்கு மாறுபடும்]. 3. இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். இட்லி மாவை ஊற்றவும். பிறகு 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 4. திணை அரிசி தோசைக்கு இதைப் போல் மாவை செய்து தோசை கல்லில் ஊற்றவும் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாக பரிமாறவும். save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சிகப்பரிசி உருண்டை (Red Rice Balls)

சிகப்பரிசி உருண்டை தேவையான பொருட்கள்: சிகப்பரிசி- ½ கப் வெல்லம்- ½ கப் வறுத்த வேர்க்கடலை- ¼ கப் வறுத்த எள்- 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய்- ¾ கப் செய்முறை: 1. பீஜே சிகப்பரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் காயவைத்து, மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். 2. 1/4 கப் வறுத்த வேர்க்கடலை, 1-2 டேபிள்ஸ்பூன் வறுத்த எள், வறுத்த சிகப்பரிசியை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். 3. கடாயில் 1/2 கப் வெல்லம் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க விடவும். 4. பின்பு பொடித்த சிகப்பரிசி கலவையுடன் வெல்ல பாகுவை கலந்து துருவிய தேங்காயை சேர்த்து உருண்டையாக பிடித்தால் சிகப்பரிசி உருண்டை தயார். save 7% Add to wishlistQuick view BeJay Red Rice Choose an option500gm 500gm ₹58.00 Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சிகப்பரிசி அடை (Red Rice Adai Dosa)

சிகப்பரிசி அடை தேவையான பொருட்கள்: சிகப்பரிசி-1 கப் சிறுபருப்பு -1/4 கப் கடலைப்பருப்பு -1/4 கப் துவரம் பருப்பு -1/4 கப் உளுந்து -2 ஸ்பூன் வத்தல்-10 சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -1 துண்டு உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயம் -சிறுதளவு வெங்காயம் – 5-6 எண்ணெய் – 3 ஸ்பூன் கடுகு- 1 ஸ்பூன் செய்முறை: 1. பீஜே சிகப்பரிசி யை 6-7 மணி நேரம் வரை ஊற வைக்கவும். 2. சிறுபருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை 1 மணி நேரம் ஊற வைக்கவும். 3. பின்பு அனைத்தையும், 10 வத்தல், 1 இஞ்சி துண்டு மற்றும் 1 ஸ்பூன் சோம்புடன் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். 4.கடாயில்,எண்ணெய் ஊற்றி கடுகு, வத்தல், வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து தோசை மாவில் ஊற்றவும். 5. பின்பு தோசைக்கல்லில் தோசை ஊற்றி சூடாக பரிமாறவும். save 7% Add to wishlistQuick view BeJay Red Rice Choose an option500gm 500gm ₹58.00 Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சிகப்பரிசி நீராகாரம் (Red Rice Gruel)

சிகப்பரிசி நீராகாரம் தேவையான பொருட்கள்: சிகப்பரிசி -4 கப் சீரகம்-3 ஸ்பூன் சின்ன வெங்காயம்- 5 மோர்- 1 கப் பெருங்காயம்- 1 டீஸ்பூன் செய்முறை: 1. வேகவைத்த பீஜே சிகப்பரிசி சாதத்தை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். 2. மறுநாள் ஊற வைத்த சிகப்பரிசி சாதத்தை நன்கு மத்து வைத்து கடைந்து கொள்ளவும். 3. அதனுடன் கடைந்த மோர், சிறிது இஞ்சி, வெங்காயம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும். 4. ஆரோக்கியமான சிகப்பரிசி நீராகாரம் தயார். save 7% Add to wishlistQuick view BeJay Red Rice Choose an option500gm 500gm ₹58.00 Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சிகப்பரிசி புட்டு (Red Rice Cake)

சிகப்பரிசி புட்டு தேவையான பொருட்கள்: சிகப்பரிசி-1 கப் நாட்டு சர்க்கரை- 1/4 கப் உப்பு – ருசிக்கேற்ப தேங்காய் துருவல்-1 கப் ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் நெய்- 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: 1. பீஜே சிகப்பரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும். 3. பின்பு பொடியாக்கிய சிகப்பரிசியில் வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும். 4. அதனை புட்டு குழலில் சிறிது சிகப்பரிசி புட்டு மாவு அதன் மேல் துருவிய தேங்காய் என வைத்து வேக வைக்கவும். 5. வெந்ததும் சிறிது ஏலக்காய்த்தூள், நெய் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும். save 7% Add to wishlistQuick view BeJay Red Rice Choose an option500gm 500gm ₹58.00 Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சிகப்பரிசி சாதம் (Red Rice Meals)

சிகப்பரிசி சாதம் தேவையான பொருட்கள்: சிகப்பரிசி – 1 கப் தண்ணீர் – 2 கப் உப்பு- தேவையான அளவு செய்முறை: 1. ஒரு கப் பீஜே சிகப்பரிசி எடுத்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2. அதை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் சேர்க்கவும். 3. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேக வைக்கவும். சாதாரண அரிசிக்குப் பதிலாக இந்த அரிசியைப் பயன்படுத்தலாம். save 7% Add to wishlistQuick view BeJay Red Rice Choose an option500gm 500gm ₹58.00 Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மாப்பிளை சம்பா அரிசி புட்டு (Bridegroom Rice Cake)

மாப்பிளை சம்பா அரிசி புட்டு தேவையான பொருட்கள்: மாப்பிளை சம்பா அரிசி-1 கப் நாட்டு சர்க்கரை- 1/4 கப் உப்பு – ருசிக்கேற்ப தேங்காய் துருவல்-1 கப் ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் நெய்- 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: 1. பீஜே மாப்பிளை சம்பா அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும். 3. பின்பு பொடியாக்கிய மாப்பிளை சம்பா அரிசியில் வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும். 4. அதனை புட்டு குழலில் சிறிது மாப்பிளை சம்பா அரிசி புட்டு மாவு அதன் மேல் துருவிய தேங்காய் என வைத்து வேக வைக்கவும். 5. வெந்ததும் சிறிது ஏலக்காய்த்தூள், நெய் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும். save 6% Add to wishlistQuick view BeJay mapillai samba rice Choose an option500gm 500gm ₹68.00 Original price was: ₹68.00.₹64.00Current price is: ₹64.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop