தினை அரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்:
- தினை அரிசி-3/4கப்
- பாசிப்பருப்பு-1/4கப்
- பச்சை மிளகாய்-2
- இஞ்சிதுண்டு- 1
- சீரகம்-1டீஸ்பூன்
- மிளகு-1/2டீஸ்பூன்
- முந்திரிப் பருப்பு-2டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை
- நெய்-1/4கப்
- தண்ணீர்-5கப்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை வெரும் வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.
2. பீஜே தினை அரிசிபாசிப்பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் திணை அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து மூடிவைக்கவும்.
4. நன்கு கொதிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும். அவ்வப்போது கலந்து விடவும்.
கொஞ்சம் நெய் சேர்க்கவும்.
5. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, மிளகு,சீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. நெய்யில் வதக்கிய பொருட்களை வேகும் பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. பின்னர் முந்திரியை அதே நெய்யில் வறுத்து சேர்க்கவும். எல்லாம் சேர்த்தவுடன் பொங்கலை நன்கு கலந்து விட்டு இறக்கினால் மிகவும் சுவையான,சத்தான, ஆரோக்கியமான தினை பொங்கல் தயார்.
-
BeJay Foxtail Millet (Thinai Rice)
₹60.00 – ₹110.00Price range: ₹60.00 through ₹110.00 Incl. GST- Pack of 1
- Pack of 2
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

