வரகு அரிசி சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி- 1 கப்
- துவரம்பருப்பு-¼ கப்
- தக்காளி-1
- சின்ன வெங்காயம்-10
- சீரகம்- ¼ டீஸ்பூன்
- வெந்தயம்-¼ டீஸ்பூன்
- கடுகு-சிறிதளவு
- முள்ளங்கி-1
- கேரட்-2
- பீன்ஸ்-5
- முருங்கைக்காய்-1
- புளி-சிறிதளவு
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்-2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்-2
- மஞ்சள்தூள்- ¼ டீஸ்பூன்
- சாம்பார் தூள்-2 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிதளவு
- வத்தல்-2
செய்முறை:
1. பீஜே வரகு அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு அதில் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
3. பின்பு வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியை நன்கு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
4. பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு மசாலா சேரும் வரை வதக்க வேண்டும்.
5. காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அதில் சிறிதளவு புளியை சேர்க்கவேண்டும் புளி வாசனை போனவுடன் நன்கு கொதிக்க வேண்டும் அதன்பிறகு 2 வீசல் வரவும் அடுப்பை அணைக்க வேண்டும்.
6. ஒரு கடாயில் நெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்துடன் கிளறிவிட வேண்டும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் ரெடி.
-
BeJay kodo millet rice (Varagu Arisi)
- 500gm
₹78.00Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page