வரகு அரிசி கிச்சடி
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி-1கப்
- பெரிய வெங்காயம்-1
- பச்சை மிளகாய்-3
- கேரட் பொடியாக அரிந்தது-1/4கப்
- பீன்ஸ் பொடியாக அரிந்தது-1/4கப்
- பச்சை பட்டாணி-1/4கப்
- தக்காளி-1
- இஞ்சி துருவியது-1/4 ஸ்பூன்
- முந்திரிப் பருப்பு-5
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை-சிறிதளவு
- கொத்தமல்லி தழை-சிறிதளவு
- எண்ணெய்-2ஸ்பூன்
- கடுகு-1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன்
- கடலைப்பருப்பு-1/2ஸ்பூன்
- நெய்-1 ஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கப் பீஜே வரகு அரிசியை வெறும் வாணலியில் நன்கு சூடு ஏறும் வரை வறுத்துக் கொள்ளவும். தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும்.
3.பிறகு பச்சை மிளகாய், வெங்காயம்,தக்காளி மற்ற காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் ஒரு கப்புக்கு மூன்றரை கப் வரை தண்ணீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
5. தாளித்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு இதை குக்கருக்கு மாற்றி அடுப்பை சிம்’மில் வைத்து இரண்டு சவுண்ட் வரை விடவும்.
6. குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கரண்டி கொண்டு கிளறி விடவும். சூடாக பரிமாறவும்.
-
BeJay kodo millet rice (Varagu Arisi)
₹65.00 – ₹120.00Price range: ₹65.00 through ₹120.00 Incl. GST- Pack of 1
- Pack of 2
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

