வரகு அரிசி உப்மா
தேவையான பொருட்கள்:
- வரகரிசி - 2 கப்
- வெங்காயம் - 2
- ப.மிளகாய் - 2
- கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
செய்முறை:
1. பீஜே வரகு அரிசியை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
3. அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
4. அடுத்து அதில் வரகரிசி குருணையையும் சேர்த்து 1 கப் குருணைக்கு 3 கப் தண்ணீர் வீதம் விட்டு கிளற வேண்டும்.
5. நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி பரிமாற வேண்டும். * சத்தான வரகரிசி உப்புமா ரெடி.
-
BeJay kodo millet rice (Varagu Arisi)
₹65.00 – ₹120.00Price range: ₹65.00 through ₹120.00 Incl. GST- Pack of 1
- Pack of 2
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

