வரகு அரிசி வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி- 1 கப்
- பாசிப்பருப்பு – 1/4கப்
- காய்ந்த மிளகாய் – 3
- இஞ்சி – சிறிய துண்டு
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- முந்திரிபருப்பு – 10 – 15
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உளுந்து – 1 டீஸ்பூன்
- பெங்காயம்- சிறிதளவு
செய்முறை:
1. ஒரு சிறிய பாத்திரம் எடுத்து பீஜே வரகு அரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும்.
2. இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரம் அல்லது கடாயில் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
3. பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும்.
4. இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அலசி வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை இட்டு அவை வேக 2 கப்தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
5. மேலும் அவற்றோடு 1 டீ ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குக்கர் என்றால் 4 – 5 விசில் போதுமானது.
6. நன்கு வெந்த பிறகு அவற்றை தாளிக்க, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் விடவும். அவை சூடானதும், முந்திரி பருப்பு, உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் கடைசியாக சீரகம் சேர்த்து வறுக்கவும். பிறகு அவற்றோடு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.
7. இவை தயார் ஆனதும், முன்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது வரகரிசி பொங்கல் தயார்.
*அவற்றோடு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம் .
-
BeJay kodo millet rice (Varagu Arisi)
- 500gm
₹78.00Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page